Saturday, September 26, 2009

தந்தைக்கு

சில  நல்ல விஷயங்கள்:
     நான் உணர்ந்த சில நல்ல விஷயங்களை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நம் அம்மாவை போலவே நமது அப்பாவும் அவர்கள் பிள்ளைகள் மீது அளவு கடந்த
பாசத்தை கொண்டு உள்ளனர்,ஆனால்அது அவர்களுடைய சில பிள்ளைகளால் முழுமையாக புரிந்துகொள்ளபடுவதில்லை.அந்த தந்தைகளும் தன் பாசத்தை வெளிபடையாக தன் பிள்ளைகள் மீது பொழிவதில்லை.தன் மனதுக்குள் வைத்தே வாழ்கின்றனர். ஒரு குறிபிட்ட வயது வரை தன் தந்தையின் சொல்லை கேட்டு நடந்த அதே பிள்ளைகள் ஒரு குறிபிட்ட வயதை அடைந்த உடன் அவர்களுது சொல்லை கேட்பதில்லை .தந்தைக்கும் மகன்னுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன.திரு.சுசி கணேசன் அவர்கள் இதை தன்னுடைய "பைவ்  ஸ்டார் " என்னும் திரைப்படத்தில் சொல்லி இருப்பார்.அதில் ஒரு தந்தை இருப்பார் அவர் அவருடைய மகனுக்காக ஒரு பெண்ணை பார்ப்பார் கட்டாய திருமணமும் நடைபெற்று விடும் .அது பிடிக்காமல் மகன் வீட்டை  விட்டு வெளியேறுவார்.வேறு ஒரு நாட்டுக்கு சென்று தான்  விரும்பியபடியே  ஒரு பெண்ணை மனம் முடித்து வாழ்வர்.ஆனால் இங்கு அவர் சொந்த ஊரில் அவருக்காக ஒரு பெண் அவருடைய தந்தை என அனைவரும் காத்திருப்பார்கள்.இறுதியில் தன் மகனுடைய நிலையை அறிந்த பின் ஒரு பெண்ணுடைய வாழ்வையும் பாழ்படுத்திய குற்ற உணர்ச்சியில் தற்கொலையும் செய்து கொள்வார்.அவருடன் அவருடைய பாசமும் இறந்து விடுவதாக படம் முடிவடைகிறது.வெளிபடுத்தபடாத  உணர்வுகளால் எந்த பயனும் இல்லை என்பதை சொன்ன படம்.இதை போல் சமிபத்தில் விஜய் டிவி இன் "காபி வித் அணு" மறு ஒலிபரப்பு நிகழ்ச்சியில் திரு வைரமுத்து அவர்கள் கலந்து கொண்டார் .நிகழ்ச்சியின் முடிவில் காபி அவார்ட் வழங்கப்பட்டது. திரு வைரமுத்துக்கு வழங்கிய பின் இதை யாருக்கு அளிக்க விரும்புகிறிர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவருடைய பதில் பின்வருமாறு "நான் அவரை நேசிக்க வேண்டும் என்று நினைப்பவர்.அவருக்காக நான் தினமும் சிறிதளவாவது நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைப்பவர் என்னுடைய எழுத்தாலும் புகழாலும் அவரை விட்டு நெடுந்துரம் சென்று விட்டதாக நினைப்பவர்.அவருக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அவரை தன்னை விட்டு பிரித்ததாக நினைப்பவர் .அவர் வேறு யாரும் அல்ல என்னுடைய தந்தை.ஒருவர் இறந்த பிறகு அவருடைய காலை பிடித்து கொண்டு என்னை மன்னித்துவிடுங்கள் என்று கதறுவதில் எனக்கு உடன்பாடில்லை(எனக்கும்) அவர் உயிரோடு இருக்கும் பொழுதே அவருடைய கையை  பிடித்து கொண்டு என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறுவதையே பெருமையாக கருதுகிறேன்.அப்பா நான் எப்போதும் உங்களை நேசித்து கொண்டு தான் இருக்கிறேன்.உங்களை விட்டு நான் எங்கும் சென்று விடவில்லை.உங்களுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்மை தான் ஆனால் அந்த கருத்து வேறுபாடுகள் என்னை உங்களிடம் இருந்து பிரித்து விடவில்ல.அப்பா நான் உங்கள் கையை பிடித்து கொண்டு கேட்கிறேன்  நான் ஏதேனும் தவறு செய்து இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் .எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இந்த ஊடகத்திற்கும் நன்றி   "
என கூறி நிகழ்ச்சியை முடித்திருப்பார்.
   பல தந்தை மகன் உறவு இவ்வாறு தான் உள்ளது.பல தந்தை மகன் நேருக்கு நேர் நின்று முகம் பார்த்து கூட பேசுவது இல்லை.இந்த நிலை மாற வேண்டும் உங்களின் பாச உணர்வுகளை தயவு  செய்து உங்களுக்குள்ளேயே பூட்டி வைக்காதிர்கள்.முடிந்த வரை வெளிப்படுத்துங்கள்.வெளிப்படுத்தாத எந்த உணர்வுக்கும் எந்த மதிப்பும் இல்லை.



Tamilish


No comments:

Post a Comment