Tuesday, September 29, 2009

ரசித்தவை

இது கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரும் சந்திக்கும் பிரச்சினை, இதை சமாளிப்பது
எப்படி? கல்யாணத்துக்கு மறுநாளில் இருந்துதான் சமையலை கிச்சனில்
செய்வார்கள் என்ற அரிய உண்மை பல பெண்களுக்கு தெரியவருகிறது, அவர்கள் சில
பல நிர்பந்தகள் காரணமாக சமைக்க நேரிடுகிறது, அப்படி சமைத்துசாப்பாடு
போடும் பொழுது சாப்பிட்ட பின் ஏதும் என்னை பாராட்டுறீங்களா? எவ்வளோ
கஷ்டப்பட்டு செஞ்சேன் என்று கண்ணை கசக்கிட்டு நிற்பார்கள். சாப்பிட்ட
நமக்கோ என்ன சாப்பிட்டோம் என்றே தெரியாது, அப்படி இருக்க என்ன சொல்லி
பாராட்டுவது. சில சமயம் வழியில் பார்க்கும் ஒருவருக்கு நம்மை நன்றாக
தெரிந்து இருக்கும் ஆனால் அவரை நமக்கு தெரியாது ஆனால் தெரிந்த மாதிரி
பேசிவிட்டு வந்து யார் அவர் என்று மண்டைய குழப்பிப்போம் அதுபோல் என்ன
சாப்பிட்டோம் என்ன சொல்லி பாராட்டுவது என்று தெரியாமல் விழிக்கும்
ஆண்களுக்காக இந்த பதிவு.

சாப்பிட்டது சாம்பார் என்று உறுதி செய்வது எப்படி?
மஞ்சள் நிறத்திலும் அதில் துவரம் பருப்பும் இருந்தால் அது சாம்பார் தான்
என்று கிட்டதட்ட முடிவு செய்துவிடலாம், அதில் முருங்கைகாய்,வெங்காயம்,
போன்ற காய்கறிகள் இருந்தால் அது கண்டிப்பாக சாம்பார் தான்.சில சமயம்
வித்தியாசமாக செய்கிறேன் என்று அதில் தேங்காய் அரைத்துவிடுவார்கள்
(கேட்டா வித்தியாசமான சாம்பார் என்பார்கள்) அப்படி இருந்தாலும் அது
கண்டிப்பாக சாம்பார்தான்.

ரிஸ்க்: மஞ்சள் நிறம் கொஞ்சம் குறைவாகவும், சிகப்பு நிறம் கொஞ்சம்
அதிகமாகவும் இருக்கும் ஆனால் அதில் துவரம் பருப்பு இருக்கா என்று உறுதி
செய்துக்கொள்ளவும். சிலர் பாசிப்பருப்பும் போடுவார்கள்.


ரசம் என்று உறுதி செய்வது எப்படி?
நிறம் மஞ்சள் கொஞ்சம் குறைவாகவும், மிகவும் தண்ணியாகவும் இருக்கும் அதில்
காய்கறி இருக்காது,சில சமயம் துவரம்பருப்பு இருக்கும் இங்கே கவனம்
தேவை,முதலில் காய்கறி இல்லை என்பதை உறுதி செய்யதபின் ரசம் தான் என்ற
முடிவுக்கு வந்துவிடலாம்.
ரிஸ்க்: தண்ணியாக இருப்பது எல்லாம் ரசம் இல்லை, சூடாகவும் கொஞ்சம்
இனிப்பாகவும் கொஞ்சமாக டம்ளரில் காலையிலும்,மாலையிலும் கொடுத்தால்அதற்கு
பெயர் டீ அல்லது காப்பி! (சில சமயம் சர்கரை போட மறந்தாலும் மறந்து
இருக்கலாம்).

புளிக்குழம்பு அல்லது வற்றல் குழம்பு உறுதி செய்வது எப்படி?
நிறம் கொஞ்சம் சிகப்பு கலரிலும், கொஞ்சம் கெட்டியாகவும்
இருக்கும் ,பூண்டு வெங்காயம் போன்றவை இருக்கும் பருப்பு இருக்காது அப்படி
இருந்தால் அது புளிக்குழம்பு,அதில் கொஞ்சமாக சுண்டைக்காய் போன்ற வத்தல்
கருக்கி கருப்பு நிறத்தில் அதில் கிடந்தால் அது வத்தல் குழம்பு.

******************************************************************************
சாதம் வகைகள்

சாதம் வெள்ளையாகவும் உப்பு, உறைப்பு ஏதுவும் இல்லாமல் இருந்தால் அது
வெறும் சாதம். (கொஞ்சம் உறைப்பாக இருந்தாலோ அல்லது கொஞ்சம் உப்பாக
இருந்தாலோ அது ஏதோ வெரைட்டி சாதம்).

ரிஸ்க்: சில சமயம் குழஞ்சி பொங்கல் போல இருக்கும் ஆனால் அதில்
மிளகு,பச்சை மிளகாய் போன்றவை இருக்கா என்று பார்க்கவும் அப்படி இருந்தால்
அது பொங்கல். இல்லை என்றால்அது வெறும் சாதம்.
புளிசாதம்: நிறம் கொஞ்சம் சிகப்பாகவும் அதில் கொஞ்சம் நிலக்கடலையும்,
காய்ந்த மிளகாயும் கிடக்கும் அப்படி இருந்தால் அது புளிசாதம். சுவை சில
சமயம் புளிப்பு.
லெமன் ரைஸ்: நிறம் மஞ்சள், சுவை கொஞ்சம் புளிப்ப்பு, கடலைபருப்பு, பச்சை
மிளகாய் கிடக்கும்.
இந்த இருவகை சாதத்தையும் சரியாக கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டால் இனி
பிரச்சினை இல்லை.
சிக்கன் பிரியாணி: அதே புளிசாதம் போல் சிகப்பு ஆனால் சிக்கன் பீஸ்
கிடக்கும் அப்படி இருந்தால் அது சிக்கன் பிரியாணி, அவரசப்பட்டு சிக்கன்
புளிசாதம் என்று சொல்லிவிடக்கூடாது.
ரிஸ்க்: சிலசமயம் மனைவியின் அப்பா,அம்மா, தம்பி , அக்கா வந்து இருந்தால்
உங்களுக்கு வெறும் சாதம் மட்டுமே கிடைக்கும் அதை வைத்து அவசரப்பட்டு
புளிசாதம் என்று சொல்லிடக்கூடாது அன்று அமைதியாக இருப்பது நலம்.
அதுமட்டும் இன்றி அவர்கள் வந்து இருந்தால் அன்று விசேசமாக நான் வெஜ் தான்
இருக்கும் வெஜ் இருக்காது ஆகையால் அது சிக்கன் உங்களுக்கு வந்தாலும்
வராவிட்டாலும் அது பிரியாணிதான்.
முக்கியமாக பிரியாணியில் பருப்பு வகைகள் இருக்காது.
******************************************************************************
இதர சில குறிப்புகள்
சேமியாபோட்டு கொஞ்சம் தண்ணியாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருந்தால் அது
பாயசம், அதே சேமியா கொஞ்சம் உறைப்பாக இருந்தால் அது கிச்சடி.(கிச்சடி
கெட்டியாகதான் இருக்கும் என்று சொல்லமுடியாது சில சமயம் டம்ளரில் கிச்சடி
குடித்த நண்பர்கள் கூட இருக்கிறார்கள்.(நந்து உங்களை சொல்லவில்லை)
ரவை போட்டு அது இனிப்பாகவும் கொஞ்சம் சிகப்பு கலரிலும் இருந்தால் அது
கேசரி, அதுவே கொஞ்சம் உப்பாக இருந்தால் அது ரவா உப்புமா!
கொஞ்சம் கடலைமாவில் உள்ளே வெங்காயம்,அல்லது காளிபிளவர்,அல்லது
உருளைகிழங்கு போன்றவை இருந்தால் அவை பஞ்சி.(மொறுமொறுப்பாக இருக்கவேண்டு
என்ற அவசியம் இல்லை).
வடை: தட்டையாகவும் நடுவில் ஓட்டையும் இருந்தால் அது வடை, ஓட்டை இல்லாமல்
இருந்தால் அது போண்டா! (இப்பொழுது வடை வட்டமாக வருவது இல்லை, அது
கடைசியாக பாட்டி சுட்ட வடைய காக்கா தூக்கிட்டு போனதோடு வழகொடிந்து
போய்விட்டது)
**********************************************************************
சில சமயம் அறுசுவை.காம், 30 நாட்களில் முப்பது வகையாக சமைப்பது எப்படி?,
தாமோதரன் கிச்சன் என்ற புத்தங்களையும்,சமைப்பது எப்படி என்று போடும் டீவி
நிகழ்சியையும் பார்த்து சிலசமயம் புதுசா ஏதும் செய்வார்கள் அன்று மேல்
சொன்னவை போல் இல்லாமல் நிறம் வேறுமாதிரி இருந்தால் அது எதுவாக எப்படி
இருந்தாலும் "என்னமோ புதுசு புதுசுசா செஞ்சு கலக்குற" என்று மட்டும்
சொல்லி நிறுத்திவிடுங்க.
இதைவைத்து உங்கள் மனைவி சமயலை பாராட்ட ஆரம்பிங்க, எஞ்சாய் செய்யுங்க!
டிஸ்கி: சில சமயம் உப்பு, உறைப்பு, புளிப்பு எதுவும் இருக்காது
இருந்தாலும் எக்ஸ்பீரியன்ஸையும், மூலப்பொருட்களையும் வைத்து அது என்ன
என்று கண்டுபிடிக்கனும்.
பிற்சேர்க்கை: இது முழுக்க முழுக்க கற்பனையே! இதை யாருடைய மிரட்டலுக்கும்
பயந்து சொல்லவில்லை!!!






3 comments:

வரதராஜலு .பூ said...

//அப்படி சமைத்துசாப்பாடு
போடும் பொழுது சாப்பிட்ட பின் ஏதும் என்னை பாராட்டுறீங்களா? எவ்வளோ
கஷ்டப்பட்டு செஞ்சேன் //

பாராட்டிதான் ஆகனும். என்ன செய்வது? ஆனாலும் ஒரே நாள்ல எத்தினி பொய் சொல்லனும். சாதம் நல்லாயிருக்கு, துவையல் நல்லாயிருக்கு, சாம்பார் நல்லாயிருக்கு, பொரியல் நல்லாயிருக்கு, தயிரு நல்லாயிலுக்கு. இன்னும் அதிகமாகவும் செல்லனும் சிலசமயம்.

தினமும் இத்தனை பொய் சொல்றது நல்லதுங்களா?

சாமி எதுவும் கண்ண குத்தாதுதானே?

Unknown said...

I liked the post very much. Will definitely show it too my wife.

The very first day after my marriage my wife made idly, it was brown in colour.

So idly need not be white. and still u need to praise your wife if you need a peaceful life.

Regards,
Prem Anand

Abdul Rahman said...

Thanks for you all

Post a Comment