Wednesday, December 30, 2009

விஜய் டி.வி.,யில் மீண்டும் கமல்


சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகளை பூர்த்தி செய்த கமல்ஹாசனுக்கு ‌பொன்விழா நடத்தி கவுரவித்த விஜய் டி.வி.,யில் கமல்ஹாசன் பங்குபெறும் நிகழ்ச்சி வரப்போகிறது. சின்னத்திரை உலகில் நிலவும் போட்டிகளுக்கு மத்தியில் எப்போதுமே புதுமையான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் விஜய் டி.வி., கமல்ஹசன் பொன்விழாவை முன்னிட்டு கமல்50 என்ற நிகழ்ச்சியை நடத்தி பெரும் வரபேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி கமல்ஹாசனையும் ரொம்பவே கவர்ந்து விட்டது போல! அதனால்தானோ என்னவோ... விஜய் டி.வி., விரைவில் நடத்தவிருக்கும் புதிய ஷோவில் கமல்ஹாசன் பங்கேற்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். பங்கேற்பு என்றால் கெஸ்ட்டாக அல்ல. இந்தியில் அமிதாப் பச்சன் நடத்திய குரோர்பதி போன்று, தமிழில் கமல்ஹாசன் முற்றிலும் வித்தியாசமான நிகழ்ச்சியை வழங்கப்போகிறாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.
Source-Dinamalar

Monday, December 28, 2009

குறைந்து வரும் விவசாய நிலங்கள்

அரிசி இறக்குமதி செய்ய,​​ நீண்டகா​ லத்​திற்​குப் பின்​னர் மத்​திய அரசு சமீ​பத்​தில் அனு​மதி வழங்​கி​யுள்ளது.​ இந்தியாவின் உயிர்நாடித் ​ தொழில் விவசாயம்.​ அதிலும்,​​ அரிசி இந்தியர்களின் முக்கிய உணவாக உள்ள நிலையில் இத்தகைய இறக்குமதிக்கான அனுமதி நாட்டில் ​ விவசாயம் தேய்ந்து வருவதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் ​(2009,​ ஜூலை 24-ம் தேதி)​ மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்படி,​​ இந்தியாவின் ​ அரிசி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ளது.​ அதாவது 1 கோடியே 45 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் ​ பயிரீடு 1 கோடியே 10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

நாட்டின் அரிசி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உத்தரப்பிரதேசம்,​​ பிகார்,​​ மேற்கு வங்கம்,​​ சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நெல் ​ பயிரிடுவது கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது.​ ​

தமிழகத்தின் மொத்த உணவுதானிய உற்பத்தியில் 85 சதவீதத்தை அரிசிதான் பெற்றுள்ளது.​ மாநிலத்தில் சுமார் 19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது.​ ஆனால்,​​ இங்கும் விவசாய நிலங்கள் மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது.​ தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் கருதப்பட்ட தஞ்சைப் பகுதி தற்போது பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.​ ஆம்,​​ காவிரிப் படுகைப் ​ பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகின்றன.​ இதனால்,​​ வாங்கப்படும் விவசாய நிலங்கள் மட்டுமன்றி அதன் அருகிலுள்ள விளைநிலங்கள் ​ மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் கடும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.​ ​ ​

கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி,​​ மருத்துவமனை,​​ தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் ​ உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.​ இதைத் தடுப்பதற்கு கேரளத்தில் உள்ளதுபோல் விளைநிலத்தை குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த ​ வேண்டும்.

2005-06-ம் ஆண்டு தகவல்படி அரிசி உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.​ இம்மாவட்டத்தில் 1,68,435 ஹெக்டேர் ​ நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது என்று தமிழக அரசின் இணையதளம் தெரிவிக்கிறது.​ ​(நாகை மாவட்டம் இரண்டாமிடத்திலும்,​​ தஞ்சை ​ மாவட்டம் மூன்றாமிடத்திலும் உள்ளன.)​ நாடு முழுவதும் பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானத் துறை மிக வேகமாக வளர்ச்சி ​ பெற்று வருகிற நிலையில்,​​ தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம்,​​ காஞ்சிபுரம்,​​ திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தற்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தை செங்கல் சூளைகளாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.​ ​

செங்கல் சூளைத் தொழில் லாபகரமாக உள்ளது என்றாலும்,​​ இது பூமி வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்யும் அபாயமும் ​ இருக்கிறது.​ சுமார் ஒரு லட்சம் செங்கற்களைத் தயாரிக்க 30 முதல் 40 டன் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.​ இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்ற நிலையில் காடுகள் அழிக்கப்படுவதுடன் பூமி வெப்பமும் அதிகரிக்கிறது.

குடியிருப்புப் பகுதிகள் பெருகிய நிலையில் ஏரி நீர்ப்பாசனம்,​​ கால்வாய் நீர்ப்பாசனம் ஆகிய பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் குறைந்து கிணற்றுநீர்ப் பாசனம் அதிகரிக்கத் தொடங்கியது.​ ஆனால்,​​ தற்போது கிணற்றுநீர்ப் பாசனமும் வெகுவாகக் குறைந்துள்ளது.​ 1974-ல் ​ தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பம்ப்செட்டுகள் இருந்தன.​ ஆனால்,​​ தற்போது சுமார் 20 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளன.

மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருவது ஊரறிந்த ரகசியம்.​ இதனால் ஆற்றுப் படுகைகளில் ​ நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகிலுள்ள விவசாயப் பாசனக் கிணறுகள் வறண்டு வருகின்றன.​ இதனால்,​​ தண்ணீர் இல்லாத நிலையில் -​ வானமும் பொய்த்துவிடுகின்ற சூழலில் -​ விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.​ இதனால் ​ விளைநிலங்கள் 'விலை'நிலங்களாக வேறு பணிகளுக்கு மாற்றம் பெறுகின்றன.

தமிழகத்தில் 2004}2005-ம் ஆண்டில் மொத்த உணவுதானிய உற்பத்தி 61,46,044 டன்கள் ஆகும்.​ ஆனால்,​​ 2005}06-ல் 61,16,145 ​ டன்கள் தான்.​ இது முந்தைய ஆண்டைவிட 29,899 டன்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல் எஸ்டேட் துறை தற்போதைய அளவுக்கு அசுர வளர்ச்சி பெறாத காலத்திலேயே இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால்,​​ விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும்,​​ தொழிற்சாலைகளாகவும்,​​ சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் உருமாறி வரும் இன்றைய ​ காலத்தில் விவசாயத்தின் பரிதாப நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கணித்துக்கொள்ளுங்கள்.

கிராமப்புற வங்கிகள்,​​ விவசாய கூட்டுறவு வங்கிகள் ஆகியவை விவசாயிகளுக்கு அளிக்கும் மொத்தக் கடன்களைவிட,​​ வர்த்தக வங்கிகள் ​ தொழிற்சாலைகளுக்கு அளிக்கும் கடன்களின் அளவு நம் நாட்டில் எப்போதுமே பல மடங்கு அதிகமாக உள்ளது.​

இந்நிலை மாறி ​ விவசாயத்துக்குத் தேசிய வங்கிகளும் தனியார் வங்கிகளும் பெருமளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உரங்களுக்காக விவசாயிகள் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியிருப்பதால் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாய முறை குறித்த ​ விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த அரசும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

இந்தியாவின் 75 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்களில் வசிக்கும் ​ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு மத்திய,​​ மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும்.​ கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த ​ குறுந்தொழில்களில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.​ அவர்களுக்கு வங்கிக் கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் ​ நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.​ ​

இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும் அதுசார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.
Source-Dinamani

Thursday, December 24, 2009

ஹிட்லருக்கு யூதர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது ஏன்?



ஜெருசலேம் : "ஜெர்மன் சர்வாதிகாரியாக இருந்த அடால்ப் ஹிட்லர், தன் தாயை, யூத இனத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் விஷம் கொடுத்து கொன்றார், என, நம்பியதாலேயே, அவருக்கு யூதர்கள் மீது வெறுப்பு உண்டாகியது' என, புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜோகிம் ரீக்கர் என்பவர், "முதல் உலகப் போர் படுகொலைகளுக்கு எப்படி வழிவகுத்தது' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஹிட்லரின் தாய் கிளாரா, அவரின் வாழ்க்கையில் ஒரு அழியாத நினைவை விட்டு சென்றார். ஹிட்லருக்கு 18 வயதிருக்கும் போது, அவரது தாய்க்கு, மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு யூத இனத்தை சேர்ந்த டாக்டரான, எட்வர்டு பிளாக் என்பவர் சிகிச்சை அளித்து வந்தார். அவர், கிளாராவிற்கு, ஐயடோபார்ம் மருந்து அளித்தார். இதை தொடர்ந்து, கிளாரா, கடந்த 1907ம் ஆண்டு, தன் 47வது வயதில் உயிரிழந்தார். இதிலிருந்து, யூத டாக்டர், தன் தாய்க்கு விஷம் கொடுத்து கொன்றதாக, ஹிட்லர் நம்ப தொடங்கினார். இதனாலேயே, அவருக்கு யூதர்கள் மீது வெறுப்பு உண்டாகியது.இவ்வாறு அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

Source-Dinamalar

Tuesday, December 22, 2009

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது


புதுடில்லி : புதுடில்லியில் 2009ம் ஆண்டின் பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு சி.என்.என். ஐ.பி.என்., "டிவி'யின் "சிறந்த இந்தியர்' விருது நேற்று வழங்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் நடிகர் கமல்ஹாசன் உட்பட பலருக்கு, விருது வழங்கினார்




Source-Dinamalar

Saturday, December 19, 2009

தனி ஈழம் வேண்டுமா? கனடாவில் இன்று ஓட்டெடுப்பு


தனித் தமிழ் ஈழம் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி, கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் இன்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய உள்ளனர். ஓட்டெடுப்பின் முடிவுக்கேற்ப, இலங்கையில் அமைதி நிலவுமா, போர் தொடருமா என்பது தெரியவரும்.
இலங்கையில் நடந்த நான்காவது கட்ட போர் முடிவுக்கு வந்துள்ளது. சாதாரண ஆயுதக் குழுவாக துவங்கி, முறையான ராணுவமாக வளர்ந்த விடுதலைப் புலிகளின் சகாப்தமும் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் கொஞ்ச காலத்துக்கு, தனி ஈழம் பற்றி சிந்தித்துக் கூட பார்க்க முடியாது என்பதே இலங்கைத் தமிழர்களின் எண்ணமாக இருக்கிறது. இலங்கையில் வாழும் தமிழர்கள், மவுனமாகத் தான் இருந்தாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளனர். ஆனால், வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களின் நிலைப்பாடும், எண்ண ஓட்டமும் வேறாக உள்ளது. போர்க் காலத்தில் வெளிநாடுகளில் தஞ்சமடைந்த அவர்களில் பெரும்பாலோர், இன்று தங்கள் உழைப்பால் முன்னேறி நல்ல நிலையில் உள்ளனர். வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை, போராட்டக் குழுக்களுக்கு நிதியுதவியாகவும் வழங்கி வந்தனர்.

புலிகளின் நடமாட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்ட பிறகு, தமிழ் ஈழம் என்பது, வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களிடம் மிகப் பெரிய கேள்விக்குறியாக மாறி உள்ளது. "தனி ஈழம் தான் நமது இறுதி லட்சியம்' என ஒரு சாராரும், "அதெல்லாம் இனி பகல் கனவு' என, இன்னொரு சாராருமாக, உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழர்கள் இரண்டுபட்டுக் கிடக்கின்றனர். இவர்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கனடாவில் வசிக்கின்றனர். இவர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், இலங்கைத் தமிழர்களின் உண்மையான உள்ளக் கிடக்கையை அறிந்து கொள்ளும் விதமாகவும், இன்று கனடா முழுவதும் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை, 12 மணி நேரம் நடக்க உள்ள இந்தத் தேர்தலுக்காக, 31 இடங்களில் 52 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, கனடா வாழ் தமிழர்களுக்கான தேர்தல் கூட்டமைப்பு செய்துள்ளது.

இதன் செய்தித் தொடர்பாளர் சிவ விமலச்சந்திரன் கூறுகையில், ""இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பை, இலங்கைத் தமிழர்கள் தவற விடக் கூடாது. காழ்ப்புணர்ச்சிகளையும், மனமாச்சரியங்களையும் ஓரங்கட்டிவிட்டு செயல்பட வேண்டிய நேரமிது,'' என்றார். "ஓட்டுப்பதிவு செய்பவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களது பெயர் பதிவு தேவையில்லை; இலங்கைத் தமிழர்கள் தான் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஏதாவது ஓர் ஆவணத்தைக் காட்டினால் போதும்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தேர்தலில், தனித் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை ஓட்டுக்கள் கிடைத்தால், இலங்கையின் அரசியல் வரலாற்றில் அடுத்த திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Source-Dinamalar

ஏ.ஆர்.ரஹ்​மான் காலண்​டர் வெளி​யீடு

இசை​ய​மைப்​பா​ளர் ஏ.ஆர்.ரஹ்​மான் அறக்​கட்​ட​ளை​யின் நிதி​யு​த​விக்​காக,​​ அவ​ரு​டைய அரிய புகைப்​ப​டங்​க​ளு​டன் கூடிய 2010-ம் ஆண்டு காலண்​டர் வெளி​யி​டப்​ப​டு​கி​றது.​
ஏ.ஆர்.ரஹ்​மான் அறக்​கட்​டளை,​​ தற்​போது சென்னை மாந​க​ராட்​சிப் பள்​ளி​யில் பயி​லும் 30 மாண​வர்​க​ளுக்கு இல​வச இசைக் கல்​வி​யைப் பயிற்​று​வித்து வரு​கி​றது.​ வரும் ஆண்டி​லி​ருந்து மேலும் அதிக எண்​ணிக்​கை​யி​லான மாண​வர்​க​ளுக்கு இசைக் கல்​வி​யைப் பயிற்​று​விக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளது.​

இதற்கு நிதி சேர்க்​கும் வகை​யில் ஆடியோ மீடியா எஜு​கே​ஷன் நிறு​வ​னத்​தின் துணை நிறு​வ​ன​மான வேர்ல்​டு​வைடு நிறு​வ​னம் இந்த காலண்​டரை வெளி​யி​டு​கி​றது.​ இந்த காலண்​டர் ​ இசை,​​ மொழி,​​ காதல் ஆகி​ய​வற்றை தலைப்​பு​க​ளா​கக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்​மா​னின்​மேற்​கோள்​க​ளு​டன் வடி​வ​மைக்​கப்​பட்​டுள்​ளது.​ இந்த காலண்​ட​ரைப் பெற www.arr​ahm​an.com ​ என்ற இணை​ய​த​ளத்​தைத் தொடர்​பு​கொள்​ள​லாம்

Friday, December 18, 2009

பருவநிலை மாற்றத்தால் 40 ஆண்டுகளில் 100 கோடி பேர் இடம்பெயரும் அபாயம்



"பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால், அடுத்த 40 ஆண்டுகளில், 100 கோடி மக்கள், தென் கிழக்கு ஆசியா, மத்திய அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்ரிக்காவின் பல பகுதிகளுக்கு இடம்பெயர்வர்' என, குடியேற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சர்வதேச குடியேற்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி: பருவநிலை மாற்றத்தால், வரும் 2050ம் ஆண்டு, இரண்டரை கோடி முதல் 100 கோடி மக்கள் வரை இடம் பெயர்வர். சுற்றுச்சூழல் மாசு மற்றும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் நெருக்கடி காரணமாக, ஆப்கானிஸ்தான், வங்க தேசம், மேற்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகள், தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளுக்கே எதிர்காலத்தில் பெரும்பாலான மக்கள், இடம்பெயர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால், கடந்தாண்டு திடீரென ஏற்பட்ட பேரழிவுகளால், இரண்டு கோடி மக்கள் வீடிழந்துள்ளனர். இவ்வாறு பருவநிலை மாற்றத்தால் அகதிகளாக மாறியோர், பலர் தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வளமான பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இவர்களில், பெரும்பாலோர், ஏற்கனவே மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளுக்கு சென்றுள்ளதால், அங்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, பெரும்பாலான நாடுகள் சுற்றுச்சூழல் பாதிப் பால் ஏற்படும் இடம் பெயர்தலை தங்கள் நாட்டுக் குள்ளேயே சமாளித்துக் கொள் கின்றன. ஆனால், சிறிய தீவுகள், கடல் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் போது சர்வதேச அளவில் இடம் பெயரும் நிலை உண்டாகிறது. மேலும், அடுத்த 40 ஆண்டுகளில், 100 கோடி மக்கள் வரை இடம்பெயர்வர் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளின் இயற்கை பேரழிவுகளின் எண்ணிக்கையும் இரட்டிப் பாகி உள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஏற்படும் பருவநிலை மாற்றங்களால், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகளவிலான வெப்பநிலை 2 டிகிரி சென்டிகிரேடு முதல் 5 டிகிரி சென்டிகிரேடு வரை அதிகரிக்கலாம். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது


Source-Dinamalar

Thursday, December 17, 2009

பிள்​ளை​க​ளைக் கண்​கா​ணிப்​பார்​களா பெற்​றோர்​கள்?

தங்​கள் குழந்​தை​க​ளைப் பள்​ளி​க​ளில் சேர்ப்​ப​தோடு தங்​க​ளது கடமை முடிந்​து​ விட்​டது எனக் கரு​தா​மல் தங்​கள் பிள்​ளை​க​ளின் செயல்​பா​டு​க​ளைப் பெற்​றோர்​கள் கண்​கா​ணித்து வர​வேண்​டி​யது இன்​றைய காலத்​தின் கட்​டா​ய​மாக மாறி வரு​கி​றது.​

​ ​ தொடக்க நிலை​யைக் காட்​டி​லும் உயர் மற்​றும் மேல்​நிலை வகுப்​பு​க​ளில் பயி​லும் மாண​வர்​க​ளைக் கண்​டிப்​பா​கப் பெற்​றோர்​கள் கவ​னத்​து​டன் கையாள வேண்​டும்.​ ஏனெ​னில் வளர்​இ​ளம் பரு​வத்​தில் உள்ள இவர்​க​ளின் ஒவ்​வொரு செய​லுமே அவர்​க​ளுக்​குச் சரி​யா​கப் படும் என்​ப​தால் இந்​தப் பரு​வத்​தில் அவர்​கள் மீது கண்​டிப்​பாக ஒரு கண் வைக்க வேண்​டும் என்​பதை யாரா​லும் மறுக்க முடி​யாது.​

​ ​ முன்​பெல்​லாம் பள்​ளி​க​ளில் ஆசி​ரி​யர்​க​ளைப் பார்த்​தால் மாண​வர்​க​ளுக்​குப் பயம் கலந்த மரி​யாதை வரு​வது இயல்​பாக இருந்​தது.​ அன்​றைய கால​கட்​டத்​தில் மாண​வர்​க​ளாக இருந்​த​வர்​கள் தற்​பொ​ழுது உயர்ந்த நிலைக்கு வந்த பின்​னர் தங்​க​ளின் இந்த உய​ரிய நிலைக்​குக் கார​ணம் ஆசி​ரி​யர்​கள்​தான் என்​பதை உணர்ந்து அவர்​க​ளுக்கு பல்​வேறு உத​வி​க​ளைச் செய்து வரு​வ​தை​யும்,​​ வீடு கட்​டிக் கொடுத்​துக் கொண்​டா​டி​ய​தை​யும் இன்​றைய ஒவ்​வோர் ஆசி​ரி​ய​ரும் ஆச்​ச​ரி​யத்​து​டன் பார்க்​கின்​ற​னர்.​
​ ​ ​ இன்றோ பெரும்​பா​லான மாண​வர்​கள் பள்​ளி​க​ளில்​கூட ஆசி​ரி​யர்​களை மதிப்​ப​தில்லை என்று ஆசி​ரி​யர் வட்​டா​ரங்​கள் வருத்​தத்​து​டன் தெரி​விக்​கின்​றன.​ கார​ணம் சினி​மா​வி​லும்,​​ தொலைக்​காட்சி நாட​கங்​க​ளி​லும் காமெடி நடி​கரை ஆசி​ரி​ய​ரா​கவோ,​​ பேரா​சி​ரி​ய​ரா​கவோ காட்டி,​​ அவர்​க​ளைக் கொண்டு ஆசி​ரி​யர்​களை எவ்​வ​ளவு மோச​மா​கச் சித்​தி​ரிக்க வேண்​டுமோ அந்த அள​வுக்கு மோச​மா​கக் காட்​டு​கின்​ற​னர்.​

​ ​ இக்​காட்​சி​க​ளைப் பார்த்​து​விட்டு மறு​நாள் பள்​ளிக்கு வரும் மாண​வ​னுக்​குத் தாமும் அதே​போல் செய்​தால் என்ன என்று எண்​ணத் தோன்​று​கி​றது.​ ​ விளைவு...​ மதிக்​கத்​தக்​க​வர் அல்ல ஆசி​ரி​யர் என்ற எண்​ணம்​தான் அவ​னுள் வளர்​கி​றது.​

இது சாதா​ர​ணம்.​ இப்​படி உள்​ளூர் ஊட​கங்​க​ளும்,​​ வெளி​நாட்டு ஊட​கங்​க​ளும் போட்டி போட்​டுக் காட்​டும் காட்​சி​கள் மாண​வ​னின் மன​தில் நஞ்சை விதைக்​கின்​றன.​ ​ ஊட​கங்​கள் வரு​வ​தற்கு முந்​தைய கால​கட்​டத்​தில் ஒரே பள்​ளி​யில் பயி​லும் மாணவ,​​ மாண​வி​கள் ஒரு​வ​ருக்​கொ​ரு​வர் பேசு​வ​தைத் தாங்​க​ளா​கவே தவிர்த்து வந்​த​னர்.​ ஆனால் இன்றோ ஊட​கங்​கள் எப்​ப​டிச் சந்​திக்​க​லாம்..​ அதற்​கான வழி​மு​றை​கள் என்ன...​ மாட்​டிக் கொண்​டால் தப்​பிப்​ப​தற்​கான வழி​கள் என்ன என்று அத்​த​னை​யும் பட்​டி​யல் போட்​டுக் ​ காண்​பிக்​கின்​றன.​ இப்​ப​டிப் பழத்தை உரித்து வாயிலே கொடுத்​தால் பாவம் அவர்​கள் என்ன செய்​வார்​கள்.​

​ ​ இப்​படி ஊடக வெளிச்​சத்​தில் கரைந்து பள்​ளி​க​ளில் வைத்தே மது அருந்​திய மாண​வர்​க​ளை​யும்,​​ ​ இன மோதல்​க​ளில் ஈடு​பட்ட மாண​வர்​க​ளை​யும்,​​ ​ பெண் ஆசி​ரி​யை​க​ளைக் கேலி செய்த மாண​வர்​க​ளை​யும்,​​ சக மாண​வி​க​ளைக் கிண்​டல் செய்த மாண​வர்​க​ளை​யும்,​​ ​ தேவை​யற்ற புகைப்​ப​டம் எடுத்த மாண​வர்​க​ளை​யும்,​​ படிக்​கா​மல் சுற்​றித்​தி​ரி​யும் மாண​வர்​க​ளை​யும் ஆசி​ரி​யர்​கள் தண்​டிக்க முடி​யாத நிலையே இன்று நில​வு​கி​றது.​

​ ​ அத​னை​யும் மீறித் தண்​டனை கொடுத்​தால் கல்​வித்​துறை அதி​கா​ரி​க​ளின் விசா​ர​ணைக்கு அந்த ஆசி​ரி​யர் உள்​பட வேண்​டும்.​ ​ இத​னைக்​கூட பொறுத்​துக் கொள்​ள​லாம்.​ ஆனால் தண்​டனை கொடுக்​கப்​பட்ட மாண​வர்​க​ளின் பெற்​றோர்​கள்,​​ ஏதோ,​​ இவ​ரா​வது தங்​க​ளது மகன் மீது பற்​றுக் கொண்டு தீய வழி​யில் செல்​லா​மல் திருத்​தி​னாரே என்று மகிழ்ச்சி கொள்​வ​தில்லை.​ மாறாக என் மகனை நீங்​கள் ​(நீ)​ எவ்​வாறு கண்​டிக்​க​லாம் என ஆசி​ரி​யர்​களை நோக்கி அம்​பினை எய்​வ​து​தான் ஆசி​ரி​யர்​க​ளால் ஏற்​றுக் கொள்ள முடி​யா​மல் இருப்​ப​தாக ஆசி​ரி​யர்​கள் தெரி​விக்​கின்​ற​னர்.​

​ ​ எனவே நடக்​கும் நிகழ்​வு​களை அமை​தி​யாக இருந்து கொண்டு வேடிக்கை பார்ப்​பதை தவிர ஆசி​ரி​யர்​க​ளுக்கு வேறு ஒன்​றும் செய்ய முடி​ய​வில்லை.​

நல்ல மதிப்​பெண் எடுக்க வேண்​டும் என்​ப​தற்​குக்​கூட மாண​வர்​களை ஆசி​ரி​யர்​கள் கண்​டிக்க முடி​ய​வில்லை.​ கார​ணம் இன்​றைய மாண​வர்​கள் எளி​தில் உணர்ச்​சி​வ​சப்​ப​டக்​கூ​டி​ய​வர்​க​ளாக இருக்​கின்​ற​னர்.

​ இவ்​வி​ஷ​யத்​தில் மாண​வர்​களை விட மாண​வி​க​ளைக் கண்​டிப்​ப​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்​குப் பெரும் அவ​தி​யுள்​ளது.​ இப்​ப​டிப் பள்​ளி​க​ளில் மனம் போன போக்​கில் நடந்து வரும் மாண​வர்​க​ளைக் கண்​டிப்​ப​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்கு இருக்​கும் நடை​மு​றைச் ​ சிக்​கல்​களை நாளி​தழ்​கள் மற்​றும் செய்தி ஊட​கங்​க​ளின் ​ மூலம் நன்கு தெரிந்து கொள்​ளும் மாண​வர்​கள்,​​ அதைத் தங்​க​ளுக்​குச் சாத​க​மாக்கி முடிந்​த​வரை தப்​பித்து வரு​கின்​ற​னர்.​

​ ​ மெட்​ரிக் பள்​ளி​க​ளில் ஏரா​ள​மான பணம் கொடுத்​துத் தங்​க​ளது பிள்​ளை​க​ளைச் சேர்க்​கும் பெற்​றோர்​கள்,​​ தொடர்ந்து பள்​ளி​க​ளின் ஆசி​ரி​யர்​க​ளோடு தொடர்​பு​கொண்டு விசா​ரித்து வரு​வ​தால் அங்கு மாண​வர்​கள் செய்​யும் தவறு குறைக்​கப்​ப​டு​கி​றது.​

ஆனால்,​​ அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​க​ளில் தங்​க​ளது பிள்​ளை​க​ளைச் சேர்க்​கும் பெற்​றோர்​க​ளில் பலர் சேர்க்க வரு​வ​தோடு தமது கடமை முடிந்​து​விட்​ட​தா​கக் கருதி பின்​னர் மாற்​றுச்​சான்​றி​தழ் வாங்​கு​வ​தற்​குத்​தான் வரு​கின்​ற​னர்.​

​ தங்​க​ளது மகன் அல்​லது மகள் பள்​ளிக்கு ஒழுங்​கா​கச் செல்​கி​றார்​களா?​ இல்​லையா?​ என்​பது கூட பல பெற்​றோர்​க​ளுக்​குத் தெரி​வ​தில்லை.​ இன்​னும் சொல்​லப்​போ​னால் சில​ருக்​குத் தங்​கள் பிள்​ளை​கள் எந்த வகுப்​பில் படிக்​கி​றார்​கள் என்​ப​து​கூ​டத் தெரி​வ​தில்லை என்​ப​து​தான் உச்​ச​கட்ட வேதனை.​

​ ​ இன்​றைய கால​நிலை மாற்​ற​மும்,​​ ஊட​கங்​க​ளின் போக்​கும் எந்த அள​வுக்கு மாண​வர்​க​ளின் நல​னைப் பாதித்து வரு​கின்​றன என்​பதைப் பெற்​றோர்​கள் உணர்ந்து,​​ அவர்​க​ளைத் தொடர்ந்து கண்​கா​ணிக்க வேண்​டும்.​ தொடர்ந்து பள்​ளி​க​ளின் ஆசி​ரி​யர்​கள்,​​ சக மாண​வர்​க​ளின் பெற்​றோர்​க​ளு​டன் தொடர்​பு​கொண்டு தனது பிள்​ளை​யின் நிலை என்ன என்​பதை அறிந்து கொள்ள முற்​பட வேண்​டும்.​

​ ​ எழுத்​த​றி​வித்​த​வனை இறை​வ​னா​கக்​கூட கருத வேண்​டாம்.​ மனி​த​னா​கக் கரு​தித் தங்​க​ளது பிள்​ளை​க​ளின் எதிர்​கால ​ வாழ்க்​கைக்​கா​கத்​தான் ஆசி​ரி​யர் செயல்​ப​டு​கி​றார் என்ற எண்​ணத்​து​டன் ஒவ்​வொரு பெற்​றோ​ரும் செயல்​பட்​டால் எதிர்​கால இந்​தி​யா​வின் நம்​பிக்கை நட்​சத்​தி​ர​மாக ஒவ்​வொ​ரு​வ​ரின் மக​னும்,​​ மக​ளும் உயர்​வார்​கள்.​ பெற்​றோர்​கள் சற்று சிந்​திப்​பார்​களா?​​
Source-Dinamani

Monday, December 14, 2009

அண்ணா பல்கலைகழக கட்டண விபரம்

Microsoft Office Home and Student 2007Microsoft Office Home and Student 2007 College of Engineering Guindy Fee Structure

Saturday, December 12, 2009

தமிழகத்தில் கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் 26ம் தேதி துவங்கியது. வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை கொட்டியது. தமிழகத்தில் பருவ மழை நான்கு கட்டங்களாக பெய்தது. ஐந்தாவது கட்டமாக, கடந்த 9ம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. ஆனாலும், வளி மண்டலத்தின் மேல்பகுதியில் வீசும் காற்று சாதகமாக இல்லாததால், மழை பெய்யவில்லை என்று வானிலை மையம் அறிவித்தது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவியது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் சில நாட்களாக காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. பகல் முழுவதும் வெயில் அடித்தது. நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாகவும், ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: வங்கக் கடலில் சில நாட்களாக நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக உருவாகியுள்ளது. அது தமிழகத்தை நோக்கி நகரும் என்றும், கடலில் 55 முதல் 65 கி.மீ., வேகத்திற்கு பலத்தக் காற்று வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. சென்னை, கடலூர், நாகையில் 1ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி, எண்ணூர், புதுச்சேரியில் 4ம் நம்பர் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பாக இருப்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது: சில நாட்களுக்கு முன், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி இலங்கை மட்டக்களப்பிலிருந்து 150 கி.மீ., தூரத்திற்கும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 800 கி.மீ., தூரத்திற்கும் இடையே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனத்த மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக காணப்படும், இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு ரமணன் கூறினார்.

சென்னையை நோக்கி "வார்டு' புயல்: கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது உருவான நிஷா புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி துவங்கியது. இதனால், நான்கு கட்டமாக மழை பெய்தது. தற்போது புதிதாக வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது புயலாக மாறி சென்னையில் இருந்து தென்கிழக்கே 850 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலுக்கு "வார்டு' என பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மையம் கொண்டுள்ள புயல் சின்னம் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியை நோக்கி நகரும் என தெரிகிறது. குறிப்பாக சென்னையை தாக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர் துறைமுகத்தில் எச்சரிக்கை கொடியேற்றம்: கடலூர் துறைமுகத்தில் தூர முன்னறிவிப்பு (புயல் உருவாகக்கூடிய திடீர் காற்றோடு கூடிய மழையுள்ள வானிலை பகுதி ஏற்பட்டுள்ளதற்கான எச்சரிக்கை) ஒன்றாம் எண் எச்சரிக்கை கொடி ஏற்றப் பட்டுள்ளது. மேலும் தாழங்குடா, தேவனாம்பட்டினம், முதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது.

Source-Dinamalar

Friday, December 11, 2009

பயங்கரவாதத்தின் பயிற்சி களம் பாகிஸ்தான் : சொல்கிறார் ஹிலாரி


பயங்கரவாத பயிற்சிகள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தான் எல்லையிலும் தான் பெரும்பாலும் நடக்கின்றன, என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஹிலாரி குறிப்பிடுகையில், "பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் தான் பெரும்பாலான பயங்கரவாத பயிற்சி மையங்கள் உள்ளன. உலகம் முழுவதும் நடக்கக்கூடிய நாசவேலைக்கான உத்தரவுகளும் இந்த பகுதியிலிருந்து பிறப்பிக்கப்படுகின்றன. இது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, பயங்கரவாத அடிப்படை கட்டமைப்புகளை வேரறுக்க தேவையான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இந்த பகுதியில் நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்' என்றார்.

"வெளிநாடுகளில் நாசவேலையை அரங்கேற்றும் தளமாக அமெரிக்காவை பயன்படுத்தி கொண்டார் பாகிஸ்தானை சேர்ந்த டேவிட் கோல்மேன்' என, அமெரிக்க செனட் உறுப்பினர் ஜோ லிபர்மேன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், "டேவிட் கோல் மேன் அமெரிக்க குடியுரிமை போர்வையில் பிறரது சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் அடிக்கடி இந்தியா சென்றுள் ளார். அமெரிக்காவில் இருந்த படியே மும்பை தாக்குதலுக்கு வழி வகுத்துள்ளார். "தாவூத் கிலானி' என்ற தனது முஸ்லிம் பெயரை டேவிட் கோல் மேன் என மாற்றிக்கொண்டுள்ளார். அமெரிக்காவில் இருப்பவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடமாட்டார்கள் என நாம் இனிமேல் நினைக்க முடியாது. புலனாய்வு அமைப்புகள் மூலமாக தான் இதுபோன்ற நபர்களின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டியுள்ளது' என தெரிவித்தார்

Source-Dinamalar

Thursday, December 10, 2009

ராவண் படத்தை வாங்க துடிக்கும் பிக் பிக்சர்ஸ்


தமிழ். ‌தெலுங்கு மற்றும் இந்தியில் டைரக்டர் மணிரத்னம் இயக்கி வரும் படம் ராவண். அபிஷேக் பச்சன், விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தை முதலில் திருபாய் அம்பானிக்கு சொந்தமான பிக் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க இருந்தது. பின்னர் ஏற்பட்ட குளறுபடிகளால் ராவண் தயாரிப்பில் பிக் பிக்சர்ஸ் தன்னை விடுவித்துக் கொண்டது. இதையடுத்து மணிரத்னம் தனது சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மூலம் ராவண் படத்தை தயாரித்து வருகிறார். சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் ராவண் படத்தை வாங்க பிக் பிக்சர்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறதாம். இதற்காக ஒரு பெரும் தொகையை கொடுக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மணிரத்னம் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறாராம்.

Source:Dinamalar

Friday, December 4, 2009

வீறு கொண்டு எழுந்த "விரு"


மும்பை : மும்பை டெஸ்டில் எரிமலையாய் வெடித்தார் சேவக். அதிரடியாக ஆடிய இவர் அதிவேகமாக 250 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இன்றைய ஆட்டத்தில் 3 சதம் எடுத்து உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 293 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். இதனால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது சேவக்கும் ஏமாற்றத்தை தந்தது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி "டிரா' ஆனது. கான்பூரில் நடந்த 2வது டெஸ்டில் வென்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. 3வது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பையில் நடக்கிறது. தில்ஷன் சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 8 விக் கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்திருந்தது.
சதம் நழுவல்: நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. அபாரமாக ஆடிய மாத்யூசுக்கு சதம் அடிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. ஸ்ரீசாந்த் வீசிய பந்தை அடித்த இவர், 2வது ரன்னுக்காக வீணாக ஓடினார். அதற்குள் பந்தை பெற்ற சச்சின், மிக துல்லியமாக "த்ரோ' செய்ய தோனி "ஸ்ட்ம்ப்சை' தகர்த்தார். மாத்யூஸ் 99 ரன்களுக்கு பரிதாபமாக ரன் அவுட்டனார். ஓஜா சுழலில் வலகேதரா(8) வெளியேற, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 393 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முரளி விஜய் நம்பிக்கை: பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு சேவக், தமிழக வீரர் முரளி விஜய் இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். இலங்கை பந்துவீச்சை மிகச் சாதாரணமாக சமாளித்த இவர்கள் பவுண்டரி, சிக்சர் மழை பொழிந்தனர். முரளிதரன் சுழலில் ஒரு இமாலய சிக்சர் அடித்த முரளி விஜய், டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதம் கடந்தார். தொடர்ந்து மிரட்டிய இவர், 87 (10 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்களுக்கு அவுட்டானார். சேவக், விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்து அசத்தியது.

சேவக் மிரட்டல்: துவக்கம் முதலே அதிரடி காட்டிய சேவக், 101 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் 17 வது சதம் கடந்தார். இலங்கை பவுலர் குலசேகரா வீசிய ஆட் டத்தின் 57 வது ஓவரில் நான்கு பவுண்டரிகளை விளாசிய இவர், 168 பந்துகளில் இரட்டை சதம் பதிவு செய்தார். இவருடன் இணைந்த ராகுல் டிராவிட் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டெஸ்ட் அரங்கில் 58 வது அரை சதம் கடந்தார் டிராவிட். இந்நிலையில் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 79 ஓவர் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 443 ரன்கள் குவித்திருந்தது. சேவக் (284), டிராவிட் (62) அவுட்டாகாமல் இருந்தனர். தற்போது இந்திய அணி 50 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் சேவக்கின் அதிரடி தொடரும் பட்சத்தில், இந்திய அணி முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
சாதனை மன்னன்: மும்பை டெஸ்டின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், அடுக்கடுக்கான சாதனைகளை படைத்தார் இந்திய வீரர் சேவக்.
* நேற்று 45 ரன்களை எட்டிய போது, டெஸ்ட் அரங்கில் மிக விரைவாக 6000 ரன்களை குவித்த 3 வது இந்தியர் என்ற பெருமை பெற்றார் சேவக். இதுவரை 123 இன்னிங்சில் விளையாடியுள்ள இவர், இந்த இலக்கை எட்டியுள்ளார். இதற்கு முன் சச்சின் (120 இன்னிங்ஸ்), கவாஸ்கர் (117 இன்னிங்ஸ்) ஆகியோர் இப்பெருமை பெற்றுள்ளனர்.
* இந்தியா தரப்பில் டெஸ்டில் 6 ஆயிரம் ரன்களை எட்டும் 8 வது வீரரானார் சேவக். இதற்கு முன் சச்சின் (12917ரன்) டிராவிட் (11244 ரன்), கவாஸ்கர் (10122 ரன்), கங்குலி (7212 ரன்), வெங்சர்க்கார் (6868 ரன்), லட்சுமண் (6855 ரன்) அசாருதின் (6215 ரன்), குண்டப்பா விஸ்வநாத் (6080 ரன்) ஆகியோர் இந்த இலக்கை கடந்துள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் இந்தியா சார்பில் அதிக முறை இரட்டை சதம் கடந்த வீரர் என்ற பெருமை பெற்றார் சேவக். இதுவரை இவர் 6 முறை இந்த இலக்கை எட்டியுள்ளார். இப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் டிராவிட் (5 முறை) உள்ளார். சச்சின், கவாஸ்கர் இருவரும் தலா 4 முறை இரட்டை சதம் விளாசியுள்ளனர்.
* டெஸ்ட் அரங்கில் இரண்டு முறை 300 ரன்களை கடந்துள்ள சேவக், 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இவர் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக அதிகபட்சமாக 319 ரன்கள் (2008, சென்னை) எடுத்துள்ளார். அடுத்து பாகிஸ்தான் (309, முல்தான், 2004), இலங்கை (284*, மும்பை, 2009), பாகிஸ்தான் (254, லாகூர், 2006), இலங்கை (201, காலே, 2008), பாகிஸ்தான் (201, பெங்களூரு, 2005) அணிகளுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்துள்ளார்.

* நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் 284 ரன்கள் குவித்துள்ள சேவக், டெஸ்ட் அரங்கில் ஒரே நாளில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (309 ரன்), இங்கிலாந்தின் ஹம்மண்ட் (295 ரன்) ஆகியோர் முறையே இவ்வரிசையில் முதல் மற்றும் 2வது இடத்தில் உள்ளனர்.

* 207 பந்துகளில் 250 ரன்களை நேற்று குவித்தார் சேவக். இதன் மூலம் மிகக் குறைந்த பந்துகளில் இந்த இலக்கை எட்டும் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

* டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் சேவக், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், வெஸ்ட் இண்டீசின் லாரா ஆகியோர் தலா 2 முறை 300 ரன்கள் என்ற இலக்கை எட்டியுள்ளார். மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் தற்போது 284 ரன்கள் எடுத்துள்ள சேவக், இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 300 ரன்கள் எடுத்து இப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சேவக் 293 ரன்கள் எடுத்த நிலையில், முத்தையா முரளிதரன் பந்து வீச்சில் அவுட் ஆனார். இதனால் 3 சதம் அடித்த வீரர் என்ற சாதனை கைநழுவிப்போனது.

தமிழக வீரர் முரளி விஜய் : மும்பை டெஸ்டில் சேவக் 400 ரன்கள் அடித்து சாதனை படைப்பார் சேவக் என தமிழக வீரர் முரளி விஜய் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில்,"" மும்பை டெஸ்டில் முதல் சதம் அடிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அது முடியாமல் போய்விட்டது. சேவக்கின் ஆட்டம் பிரம்மிக்க வைத்தது. இலங்கை பந்து வீச்சை மிகவும் எளிதாக சமாளித் தார். முரளிதரன் சிறப்பாக பந்து வீசிய போதும், ரன் குவிப்பில் சேவக்கின் ஆதிக்கம் தொடர்ந்தது. சேவக்கிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பந்தை தெளிவாக கவனித்துஆடுமாறு எனக்கு அறிவுறுத்தினார். அவரது ஆட்டத்தை விவரிக்க வார்த்தை இல்லை. '' என்றார்

Source :Dinamalar

Tuesday, December 1, 2009

அண்ணா பல்கலைகழகம் கலந்தாய்வு (Part Time B.E)

அண்ணா பல்கலைகழகம் கலந்தாய்வு:






உயிர்

74Uyir

சொல்லாததும் உண்மை-4







உலகப் பொருளாதாரம் எங்கு செல்கிறது?


திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருடம் முடிந்து விட்டது. உலகை உலுக்கிய பொருளாதார பிரச்னை, உலக நாடுகள் அனைத்திற்கும் பரவ ஆரம்பித்தது. எரிந்த தீ அணைந்து விட்டதா? இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதா? விடை தெரியத்தான் இந்தக் கட்டுரை.

சரியாக செப்., 2008ல் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான "லேமென் பிரதர்ஸ்' மூழ்கி விட்டது என்ற செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்த செய்திகளும் உலகையே திருப்பிப் போட்டு சென்றது.யானை புகுந்த கரும்புத் தோட்டம் போல் ஆனது உலகம். பங்குச் சந்தைகள் இருந்ததில் பாதியை இழந்தன. வங்கிகள் பல மூழ்கின. அரசாங்கங்கள், என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தன.அடிபட்டவர்கள் பல லட்சக்கணக்கானோர். எழுந்தவர்கள் சில லட்சம் பேர் தான். ஆனால், கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம். ஏனெனில் பலர் இது போன்ற நிகழ்வுகளை வாழ்க்கையில் சந்திக்காதது.அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் மிகவும் குறைவாக இருந்தன. அதில் இந்தியாவும் ஒன்று என்பதில் நமக்கு மிகவும் பெருமை.

விழுந்த காரணம் என்ன? அளவுக்கு அதிகமான சம்பளம், போனஸ் (அதாவது கோடிக்கணக்கில்) என்று கொடுத்து எடுக்கப்பட்ட எம்.பி.ஏ., இளைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகள், என்ன செய்தாவது கம்பெனியின் வருமானத்தை உயர்த்துங்கள் என்று. ஆதலால் பலருக்கு ஏதாவது செய்தாவது லாபத்தை கூட்ட வேண்டும் என்ற எண்ணங்கள், செயல்பாடுகள்.அதில் ஒன்று தான் நிதி ஆதாரம் அதிகம் இல்லாதவர்களுக்குக் கூட அதிகப்படியான வீட்டுக் கடன்களை வாரி வழங்கியது. வட்டி மிகவும் குறைந்திருந்த போது வாங்கிய அளவுக்கு அதிகமான கடன்கள் பின்னர் வட்டி கூடிய போது வட்டி கூட கட்ட முடியாத ஒரு சூழ்நிலை.வீடுகளின் விலை வேறு குறைய ஆரம்பித்தது. உலகளவில் இந்தக் கம்பெனிகள் முதலீடு செய்திருந்த முதலீடுகளும் பங்குச் சந்தையின் பாதிப்பால் மதிப்பு குறைய ஆரம்பித்தன. நஷ்டங்கள் லட்சக்கணக்கான கோடிகளில்.கடன்கள் திரும்பி வராமல் போனதால் வங்கிகளுக்கும், வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய நஷ்டம். ஆதலால், கொடுத்த கடன்கள் திரும்ப வராததால் பல வீட்டுக் கடன் நிறுவனங்களும், நூற்றுக்கணக்கான வங்கிகளும் திவாலாகி வந்தன.
எப்படி திரும்ப எழுந்தது?திரும்ப எழ காரணம், அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தான். பல நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் பல லட்சம் கோடிகள் பண உதவி செய்து அந்த கஷ்டமான சூழ்நிலையிலிருந்து மீள வழிவகை செய்தது. எல்லோருடைய ஒருங்கிணைந்த முயற்சி தான், விரைவில் மீண்டெழுந்ததற்கான காரணம். அதனால், பல நிறுவனங்கள் தப்பின.இருந்தாலும், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் காணாமல் போயின. இதில் நூறாண்டுகள் கழிந்த நிறுவனங்களும் அடங்கும்.இது தவிர மக்களும் தங்களது வாயைக் கட்டி, வயிற்றை கட்டி இருந்ததும் ஒரு காரணம். அதாவது, அந்த கஷ்டமான சூழ்நிலையில் பெரிய செலவு ஏதும் செய்யாமல் இருந்தனர். கம்பெனிகளும் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்தின. ஆதலால், அவர்களின் லாபம் கூடியது. விற்பனைகள் குறைந்த போதும் லாபம் கூடியது.
திரும்பி வந்த பங்குச் சந்தை நஷ்டங்கள்:பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டங்களை பலர் ஒரு வருடத்தில் திரும்பப் பெற முடிந்தது மிகவும் ஒரு ஆச்சரியமான விஷயம் தான். இதற்கு முந்தைய பொருளாதார நெருக்கடிகளில், அதாவது, 1987ம் ஆண்டு முதலீட்டாளர்கள், தாங்கள் இழந்தவற்றை திரும்பப்பெற இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1973ம் ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியில் முதலீட்டாளர்கள் மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.ஆனால், 1929ம் ஆண்டு ஏற்பட்ட "கிரேட் டிப்ரஷன்' (பண வாட்டம்) இழந்தவற்றை திரும்பப் பெற 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்படி பார்க்கும் போது இந்த முறை உலக நாடுகள் மீண்டெழுந்தது ஒரு வருடத்திற்குள். ஆதலால், இந்த மீண்டெழுச்சியை பீனிக்ஸ் பறவை சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்ததற்கு இணையாக ஒப்பிடுகின்றனர்.
இந்தியா ஏன் அதிகம் பாதிக்கப்படவில்லை?கடந்த ஆண்டு பொருளாதார சீர்குலைவோ அல்லது அதற்கு முன் ஏற்பட்ட ஆசிய பொருளாதார வீழ்ச்சியோ இந்தியாவை அதிகம் பாதிக்கவில்லை. காரணம், திறமையான நிர்வாகம். மேலும், உலகத்தின் பல பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போல, பொருளாதார சீர்திருத்தங்களை பெரிய அளவில் இங்கு கொண்டு வராதது தான்.
உலகமெங்கும் வங்கிகளின் நிலைமை:உலகமெங்கும் வங்கிகள் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் கடந்த ஆண்டு 25 வங்கிகளும், இந்த ஆண்டு 75 வங்கிகளுக்கும் மேல் மூழ்கி விட்டன. இந்திய வங்கிகள் நல்ல நிலையிலேயே இருக்கின்றன.இந்தியாவில் வங்கிகள் சமீபகாலத்தில் மூழ்கியதாக சரித்திரமே இல்லை. அப்படி மூழ்கும் நிலை வந்தாலும் அந்த வங்கியை நல்ல நிலையில் இருக்கும் வங்கியோடு இணைத்து, முதலீட்டாளர்களின் பணத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. உதாரணம் நியூ பாங்க் ஆப் இந்தியா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப் பட்டது. தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்சுடன் இணைக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் சாங்கில் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியுடன் இணைக்கப்பட்டது.இந்திய வங்கிகளில், தனி நபர் ஒருவருக்கு, ஒரு வங்கியில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணத்திற்கு காப்பீடு இருக்கிறது. ஏனெனில், வங்கிகளுக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில் அங்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் போட்டிருந்தால் அந்த வங்கியை வேறு வங்கியுடன் இணைக்காத பட்சத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் திருப்ப கிடைக்கும். ஆனால், அது போல சந்தர்ப்பங்கள் சமீப காலங்களில் ஏற்படவேயில்லை என்பதால் பயம் ஏதும் தேவையில்லை.
இந்த நிகழ்வுகளில் கற்றுக் கொண்டது என்ன?சேமிப்பின் அவசியத்தைக் கற்றுக் கொண்டோம். சேமிக்காதவர்களுக்கு இது ஒரு பாடமாக இருந்தது. எல்லா சேமிப்பையும் ஒரே முதலீட்டில் போடக் கூடாது என்பதையும் கற்றுக் கொண்டோம்.ஆண்டாண்டு காலமாக தங்கம், வெள்ளியில் சேமித்து வந்திருக்கிறோம், அது எவ்வளவு உன்னதமானது என்று உலகத்திற்கு நாம் எடுத்துக் காட்டினோம். உலகமும் நம்மை பின்பற்றத் தொடங்கியது. ஆதலால், தங்கம், வெள்ளி தொடமுடியாத அளவிற்கு சென்று விட்டது.
துபாயில் என்ன நடந்தது?துபாய் அரசுக்கு சொந்தமான "துபாய் வேர்ல்ட்' என்ற நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளுக்காக பல நிறுவனங்களிடமிருந்து கடன்கள், வேலைகளை வாங்கியிருந்தது. அதில் 80 பில்லியன் டாலர் (3,70,000 கோடி) அளவு கடன்களை செலுத்த முடியாததால் அதை செலுத்துவதற்கு இன்னும் ஆறு மாத தவணை வேண்டும் என்ற கேட்டது உலகையை உலுக்கியது.ஏனெனில், உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது அரபு நாடுகள் தான். உலகின் பெரிய நாடுகளே தங்களுக்கு பிரச்னை ஏற்படும் போது அரபு நாடுகளை நாடுவது வழக்கம் (சிட்டி வங்கி தனக்கு பிரச்னை ஏற்பட்ட போது அரபு நாடுகளைத் தான் நாடியது). அவர்களுக்கே பிரச்னை என்றால் எங்கு செல்வார்கள்? அரசு வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது உலகை ஒரு உலுக்கு உலுக்கியது. அதாவது தனி நபரோ அல்லது கம்பெனியோ கடன் வாங்கி கொடுக்க முடியாமல் போயிருந்தால் அது வேறு விஷயம். ஆனால், கடன் வாங்கியதோ துபாய் அரசு. அவர்களே கொடுக்க முடியாமல் போனால்?
துபாய் திரும்ப எழுமா?துபாய், உலகத்தின் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது. ஆதலால், துபாயின் பிரச்னையின் அளவு 80 பில்லியன் டாலர் என்றால், அதை தீர்ப்பது அவர்களுக்கு அவ்வளவு கடினமான காரியம் இல்லை. ஆனால், பிரச்னை இதை விட பெரிது என்றால், அது இந்தியாவை சிறிது பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.ஏனெனில், தற்போதே அங்கு கட்டட விலை மிகவும் குறைந்து விட்டது. இது தவிர வங்கிகள் இனி வீடுகள் வாங்கக் கடன் கொடுக்குமா என்பது யோசிக்க வேண்டும். ஆதலால், கட்டுமானப் பணிகள் குறையும் பட்சத்தில் அங்கு வேலை செய்யும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.துபாயும் மற்ற நாடுகளைப் போல செலவுகளை குறைக்க முயற்சிக்கும். தற்போது துபாய் போன்ற நாடுகளில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களை தலைமைப் பதவிக்கு அமர்த்தி அழகு பார்ப்பதும் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சம்பளம் கொடுப்பதும் வாடிக்கை தான். இனிமேல் அது போன்ற பதவிகள் இந்தியர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
Source :http://www.dinamalar.com/