பயங்கரவாத பயிற்சிகள் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தான் எல்லையிலும் தான் பெரும்பாலும் நடக்கின்றன, என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஹிலாரி குறிப்பிடுகையில், "பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் தான் பெரும்பாலான பயங்கரவாத பயிற்சி மையங்கள் உள்ளன. உலகம் முழுவதும் நடக்கக்கூடிய நாசவேலைக்கான உத்தரவுகளும் இந்த பகுதியிலிருந்து பிறப்பிக்கப்படுகின்றன. இது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, பயங்கரவாத அடிப்படை கட்டமைப்புகளை வேரறுக்க தேவையான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இந்த பகுதியில் நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்' என்றார்.
"வெளிநாடுகளில் நாசவேலையை அரங்கேற்றும் தளமாக அமெரிக்காவை பயன்படுத்தி கொண்டார் பாகிஸ்தானை சேர்ந்த டேவிட் கோல்மேன்' என, அமெரிக்க செனட் உறுப்பினர் ஜோ லிபர்மேன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், "டேவிட் கோல் மேன் அமெரிக்க குடியுரிமை போர்வையில் பிறரது சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் அடிக்கடி இந்தியா சென்றுள் ளார். அமெரிக்காவில் இருந்த படியே மும்பை தாக்குதலுக்கு வழி வகுத்துள்ளார். "தாவூத் கிலானி' என்ற தனது முஸ்லிம் பெயரை டேவிட் கோல் மேன் என மாற்றிக்கொண்டுள்ளார். அமெரிக்காவில் இருப்பவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடமாட்டார்கள் என நாம் இனிமேல் நினைக்க முடியாது. புலனாய்வு அமைப்புகள் மூலமாக தான் இதுபோன்ற நபர்களின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டியுள்ளது' என தெரிவித்தார்
Source-Dinamalar
Friday, December 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment