Monday, November 16, 2009

சரஸ்வதி பாடலுடன் வகுப்பை ஆரம்பிக்கும் இஸ்லாமிய பள்ளி

அம்பேத்கர் நகர்:உத்தரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளியில், தினமும் சரஸ்வதி பாடலுடன் வகுப்பு ஆரம்பமாகிறது.நம் நாட்டு தேசபக்தி கீதமான "வந்தே மாதரம்' பாடலை பாட, முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில், சதாசிபூர் கிராமம் உள்ளது.

கடந்த 33 ஆண்டுகளாக இந்த பகுதியில்,மெஹ்ரப் ஹாஷ்மி என்பவர் இஸ்லாமிய பள்ளி யான மதரசாவை நடத்தி வருகிறார். இந்த கிராமத்தில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இந்த கிராமத்தில் வேறு பள்ளி இல்லாத காரணத்தால், பெரும் பான்மையான இந்துக்களும் தங்கள் குழந்தைகளை இங்கு தான் சேர்த்துள்ளனர்.ஆங்கிலம், இந்தி, உருது, பாரசீகம், அரபு ஆகிய மொழிகள் இந்த பள்ளியில் போதிக்கப்படுகின்றன.

பைபிள், பகவத் கீதை ஆகியவையும் போதிக்கப்படுகின்றன.காலையில் பள்ளி துவங்கியதும், பிரார்த்தனைக் கூடத்தில், சரஸ்வதி பாடலுடன் வகுப்புகள் ஆரம்பமாகிறது. "இஸ்லாமிய பள்ளியாக இருந்தாலும், மதசார்பற்ற முறையில் பாடங்கள் போதிக்கப் படுவதைக் கண்டு, அரசியல்வாதிகள் பலர் பாராட்டி விட்டு செல்கின்றனர் என, மெஹ்ரப் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்

நன்றி தினமலர்

1 comment:

Anonymous said...

Great !!! kaalaiyil saraswathi paatu... mathiyam oru islamiya thozhugai... and maalai oru krithuva paadal nu irunda..innum nalla irukkum..

naan oru nathiyavathi thaan.. irundalum.. kadavul ondare enbathai kuzhanthaigalukku padippathu nandru. valarntha paruvathil thannai mattum nambi vazha katru kolvar..

Post a Comment