Friday, November 13, 2009

தில்லியில் ரயில், பஸ்களில் பொதுடிக்கெட் அறிமுகம்


புதுதில்லி, நவ. 12: தில்லியில் மெட்ரோ ரயில், தில்லி அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்ய வசதியாக பொது டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தில்லி போக்குவரத்து துறை அமைச்சர் அரவிந்தர் சிங் நிருபர்களிடம் வியாழக்கிழமைக் கூறியதாவது: தலைநகர் தில்லியில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சென்று வர ஏதுவாக பொது டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சோதனை முயற்சியாக நவம்பர் 24ம் தேதி முதல் சில இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பின்னர் இதர பகுதிகளுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது டிக்கெட் வசதி பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இதற்கான தொடக்க விழாவையொட்டி யமுனை நதிக்கரை- நொய்டா இடையே 13.1 கிலோ மீட்டர் தொலைவிலான பகுதிகளுக்குள் பொதுடிக்கெட் வினியோகிக்கப்படும் என்றார் அரவிந்தர் சிங். தில்லி போக்குவரத்து கழகத்தின் பல கட்ட ஆலோசனைக்குப் பிறகு பொது டிக்கெட் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

Source-http://www.dinamani.com/

No comments:

Post a Comment