Thursday, November 12, 2009

ஆன்லைன் மூலம் சாஃப்ட்வேர் தீர்வு: மைக்ரோசாஃப்ட் அறிமுகம்

சென்னை, நவ. 11: சிறிய, நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ஆன்லைன் மூலம் சாஃப்ட்வேர் தீர்வுகளை அளிக்கும் புதிய முறையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி மாதம் ரூ. 95 கட்டணத்தில் மின்னஞ்சல், இணையதள ஒருங்கிணைப்பு, மின்வழிச் சந்திப்பு சார்ந்த மென்பொருள் சேவைகளை இந்நிறுவனம் அளிக்கிறது. இந்நிறுவனத்தின் இணையதளத்திற்குள் சென்று பயன்பாட்டுக்கு ஏற்ற கட்டணத்தைச் செலுத்தி இச்சேவையைப் பெறலாம். ஹெச்சிஎல், இன்ஃபோசிஸ்டம்ஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களுடன் இதற்காக மைக்ரோசாஃப்ட் உடன்பாடு செய்துள்ளது.

சோதனை அடிப்படையில் இந்த சேவை கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதை பல நிறுவனங்கள் பயன்படுத்திப் பார்த்து அதில் நல்ல பலன் கிடைத்துள்ளதைத் தெரிவித்ததைத் தொடர்ந்து இம்மாதம் 7-ம் தேதி முதல் முழு வீச்சில் இந்த சேவையை அறிமுகப்படுத்துவதாக மைக்ரோசாஃப்ட் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவின் செயல்முறை மேலாளர் சாஜு குட்டி தெரிவித்துள்ளார்.

இணையதள முகவரி: www.microsoft.com/india/onlineservices

நன்றி தினமணி

No comments:

Post a Comment