இந்தியாவில் வரி கட்டாமல் பாக்கி வைத்திருப்பவர்களால் வரி பாக்கி இப்போது இரண்டு லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு விட்டது. இத் தொகை மத்திய அரசின் பட்ஜெட் தொகையில் பாதி என்பது குறிப் பிடத்தக்கது.
இந்தியாவில் இப்போது 324 லட்சம் பேர் வருமான வரி கட்டு கின்றனர். இவர்களில், மூன்று லட் சத்து 35 ஆயிரம் பேர் தொழிற் சாலைகள். மீதி தனிநபர். 2006ல் இத் தொகை 319 லட்சமாகவும், 2007-08ல் 336 லட்சமாகவும் இருந்தது.இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி வரை வரி பாக்கியாக ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் வெளியில் கிடப்பது தெரியவந் துள்ளது.தனியார் நிறுவனங்களிலிருந்து வர வேண்டிய வரி மட்டும் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய். தனி நபர்களிடமிருந்து வர வேண்டிய வரி மட்டும் 65 ஆயிரம் கோடி ரூபாய்.இவற்றில், பெரும்பாலானவை சிறப்பு நீதிமன்றங்களில் போடப் பட்ட வழக்குகள்; இழுத்து மூடப் பட வேண்டிய நிலையிலுள்ள நிறுவனங்கள்; சொத்துக்களே இல்லாத நிலை அல்லது வரிக்குத் தகுந்த சொத்து இல்லாத நிலை; அல்லது வரி வசூலிக்க கோர்ட்டு களால் வழங்கப்பட்ட இடைக் கால தடை இந்தக் காரணங்களால் வரி பாக்கி அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றங்களில் நிலுவையில் கிடக்கும் வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று நீதித் துறையைக் கேட்டுக் கொண்டுள்ளது
Source :http://www.dinamalar.com
Wednesday, November 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment