Thursday, November 26, 2009

இமயமலை உருகுதா... அரசு விளக்கம்


உலக வெப்பமயம் பிரச்னையால் இமயமலையிலுள்ள பனிப் பாறைகள் உருகவில்லை என்று புதிய தகவலை அளித்துள்ளது மத்திய அமைச்சகம். ஜெய்ராம் ரமேஷ் அமைச்சராக உள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: உலக வெப்பமயமாதலால், இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதாக சொல்கின்றனர். அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. உருகும் பனிப்பாறைகள் மீண் டும் ஒன்று சேர்ந்து உருவாகிவிடுகின்றன.

குறிப்பாக சியாச்சின், கங்கோத்ரி பகுதிகளில் இப்படித் தான் நடக்கிறது. அதனால், இமயமலை உருகிவிடும் என்று கவலை கொள்ள வேண்டியதில்லை.முதலில் வெப்பத்தால் சுருங்கி உருகும் பனிப்பாறைகள், பிறகு அப்படியே பழைய நிலைக்குத் திரும்பி விடுகின்றன. சில ஆண்டு காலமாக அலாஸ்கா மற்றும் கிரீன் லாந்தில் ஏற்பட்டுள்ள பனிப்பாறைகள் உருகுவது போன்ற ஆபத்தான நிலை இமயமலையில் இல்லை.

இருப்பினும், பனிப்பாறைகளின் நிலைமை சொல்லத்தக்கதாகவும் இல்லை. இந்த இரண்டுங் கெட்டான் நிலை, உலக வெப்பமயம் பற்றிய எச்சரிக்கை மணி என்றே நாம் கொள்ள வேண்டியதிருக்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையைத் தயாரித்த இந்திய நிலவியல் ஆய்வகத்தின் இயக்குனர் டாக்டர் ரெய்னா கூறுகையில்,"நாம் கண்காணித்த வரையில் பனிப்பாறைகள் எதுவும் உருகவில்லை. இருப்பினும், அவ்வளவு பெரிய இமயமலையைக் கண்காணிக்க ஒரே ஒரு ஆய்வு நிலையம் தான் இருக்கிறது.
ஆய்வுக்கான தரவுகள் நம்மிடம் போதுமான அளவு இல்லை. அலாஸ்கா கடல் மட்டத்தில் உள்ளது. இமயமலை கடல் மட்டத்திலிருந்து பல மடங்கு உயரத்தில் இருக்கிறது. இருநிலைகளிலும் வெப்பமயமாதல் பிரச்னை வித்தியாசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இமயமலை உருகுவது வடமாநிலங்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும்' என்றார்.
பருவநிலை மாற்றப் பிரச்னைக்காக பலநாடுகள் பங்கு பெற்றுள்ள ஐ.நா.,வின் உயரமைப் பின் தலைவரான டாக்டர் பச்சோரி, இது குறித்து அளித்த இறுதி அறிக்கையில், "இமயமலைப் பனிப்பாறைகள் உலகின் பிற பகுதிகளைவிட வேகமாக உருகுகின்றன.
இப்படியே போனால் 2035ல் இமயமலையே இருக்காது' என்று தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சகத்தின் அறிக் கை குறித்து,"இந்த அறிக்கையின் அடிப்படையை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அறிக்கை வித்தியாசமான தகவல்களை அளித்துள்ளது. இது குறித்து ஆராய்ந்து வருகிறேன்' என்று கூறியுள்ளார்.

Source :Dinamalar

No comments:

Post a Comment