பிரிட்டிஷின் புகழ்பெற்ற சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான காட்பரி விற்பனைக்கு வருகிறது. இதனை வாங்க சர்வதேச நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. காட்பரி நிறுவனத்துக்கு 16.5 பில்லியன் டாலர் வரை தர க்ராப்ட் புட்ஸ் முன்வந்துள்ளது. ஆனால் இப்போது அமெரிக்காவின் ஹெர்ஷே நிறுவனமும் களத்தில் குதித்துள்ளதால், போட்டி கடுமையாகியுள்ளது. க்ராப்ட் புட்ஸ் நிறுவனத்தைவிட 0.5 பில்லியன் டாலர் அதிகம் தர ஹெர்ஷே முன் வந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இன்னும் வாய்திறக்காமல் உள்ளது காட்பரி. இந்நிலையில் காட்பரியை வாங்க தங்களுக்கும் விருப்பமுள்ளது என்று அறிவித்துள்ளது புகழ்பெற்ற நெஸ்லே நிறுவனம். காட்பரி நிறுவனத்தை வாங்க நெஸ்லே, 18 பில்லியன் டாலர் வரை தரவும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது
Source :http://www.dinamalar.com/
Tuesday, November 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
sweet edu! kondadu!!
Post a Comment